×

சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம் கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மயிலாடுதுறை, ஏப்.27: மயிலாடுதுறையி்ல் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் நண்பகல் 12 மணிமுதல் 3 மணிவரை வெளியில் செல்லாமல் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கீழ்க்கண்டுள்ளவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்துகிறார்கள்.

நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பை தவிர்க்கலாம். பருவக்கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாக்க இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இருதய நோய் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். முதியவர்கள் மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

The post சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம் கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thepposavam Kolakalam ,Sirkazhi Chattainatha Swamy Temple ,Mayiladuthurai ,Collector ,Mahabharathi ,Tamil Nadu ,Sami ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...